புதிய பற்களை வளர்க்க முடியும்…

மெடிக்கல் மிரக்கிள்

பற்கள் விழுந்துவிட்டால் செயற்கை பற்கள் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் இம்ப்ளான்ட் (Implants), பல் செட்கள் (Dentures) அல்லது பிரிட்ஜ் (Bridges) போன்ற சிகிச்சைகள் மட்டுமே கைகொடுக்கின்றன.

பல் மருத்துவ ஆய்வில் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மனிதர்கள் உடலில் USAG-1 என்ற புரதம் உள்ளது. இதுவே, மீண்டும் மீண்டும் பற்கள் உருவாவதைத் தடுக்கும் ஒரு தடைக்கல்லாக உடலில் செயல்படுகிறது. இந்த புரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், புதிய பல் மொட்டுகள் உருவாகி, புதிய பற்கள் வளர்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.  

விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு வெற்றியடைந்து, சரியான வரிசையமைப்புடன் கூடிய ஆரோக்கியமான பற்கள் வளர்ந்துள்ளன. எனவே, பிறப்பிலேயே நிரந்தரப் பற்கள் வளராத மனிதர்களிடம் இப்போது பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்தச் சோதனை வெற்றி பெற்றால், முதுமை, விபத்து அல்லது நோய்களால் பற்களை இழந்தவர்களுக்கும் இந்தச் சிகிச்சை விரிவுபடுத்தப்படும். செயற்கைப் பொருட்களை வைத்துப் பற்களை மாற்றுவதற்குப் பதிலாக, நமது உடலின் உயிரியல் சக்தியைக் கொண்டே இழந்த பற்களை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள்.

Leave a Comment