என்ன செய்தார் சைதை துரைசாமி – 460
மேயர் பதவியில் இருப்பவர்கள் பாராட்டு விழா, விருந்துகளில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுண்டு. இவர்களில் இருந்து முழுமையாக வித்தியாசமான நபராக இருந்தார் மேயர் சைதை துரைசாமி.
பகல், இரவு என்று பாராமல், அனைத்து நேரமும் மேயர் சைதை துரைசாமிக்கு, மாநகராட்சி பற்றியே சிந்தனையும் செயலும் இருந்ததால், இவரது காலத்தில் திட்டப்பணிகள் செம்மையாக முடிவுக்கு வந்தன. இதற்கான ஒப்பீடு இதோ..
ஸ்டாலின் அறிவித்த வரவுசெலவு திட்டங்கள் : 159
முடிக்கப்பட்ட அறிவிப்புகள் : 60
இந்த வகையில் ஸ்டாலினால் நிறைவேற்றி முடிக்கப்பட்டவை மொத்தமே 33.73% மட்டுமே.
மா.சுப்பிரமணியன் அறிவித்த திட்டங்கள் : 606
முடிக்கப்பட்ட அறிவிப்புகள் : 253
இந்த வகையில் மா.சுப்பிரமணியனால் நிறைவேற்றி முடிக்கப்பட்டவை மொத்தமே 41.75% மட்டுமே.
சைதை துரைசாமி அறிவித்த திட்டங்கள் : 419
முடிக்கப்பட்ட அறிவிப்புகள் : 392
அதாவது, செய்வதை திருந்தச் செய்வது என்பதை சைதை துரைசாமி மிகத் தெளிவாக கடைப்பிடித்து வந்தார். அதனால்தான் அவரால் 93.55% திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. இந்த சாதனையை இனியொருவரால் முறியடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. இந்த வகையில் மேயர் சைதை துரைசாமி சரித்திர சாதனை புரிந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
- நாளை பார்க்கலாம்.
