உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள்
வாழ்க்கை என்றாலே ஏதேனும் பிரச்னைகள், சிக்கல்கள், மனக்கசப்புகள் வந்துகொண்டே இருப்பது சகஜம். இதுபோன்ற தருணங்களில் மனிதர்களுக்கு சட்டென உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக்கூடியவை, திரைப்படங்கள்.
ஆம், சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம். இதற்கு அதிகம் செலவழிக்கத் தேவையில்லை. இப்போது சினிமாக்கள் நம் கைப்பேசிக்கே வந்துவிட்டன. அதனால்தான் மனிதர்கள் இப்போது முன் எப்போதையும் விட அதிக மகிழ்ச்சியை எளிதாக அனுபவிக்க முடிகிறது.
அதேநேரம், நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்.
சொந்த வாழ்க்கையின் சுக, துக்கங்களை மறந்து வேறு ஓர் உலகத்தில் மனிதரை சஞ்சரிக்கச் செய்யும் சூட்சுமம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. நகைச்சுவை படத்தைப் பார்க்கும்போது குலுங்கிச் சிரிக்கிறார்கள். சோகத்தில் கண் கலங்குகிறார்கள். பழி வாங்கும் படங்களில் ரசிகனுக்கும் ரத்தம் சூடேறுகிறது. சினிமாவில் தாங்களும் ஒரு பாத்திரமாகவே ஒன்றிப் போகிறான். அதனாலே உலகம் முழுக்க மனிதர்களை ஒன்றிணைக்க சினிமாவால் முடிகிறது.
உலகின் அத்தனை மொழி மக்களாலும் ரசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 திரைப்படங்களை சிலாகித்து எழுதியிருக்கிறார் எம்.நிர்மல். சினிமாவை காதலிக்கும் ஒவ்வொரு நபரும் இந்தப் படங்களைத் தவறவிடக் கூடாது என்பதே ஆசிரியரின் விருப்பம். பட்டியலில் உள்ள திரைப்படங்களின் சிறப்புகளைப் படியுங்கள். அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து ரசியுங்கள். நண்பர்களுக்கு இந்த புத்தகத்தையும் சினிமாக்களையும் பரிந்துரை செய்யுங்கள்.
இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே படைக்கப்பட்டுள்ளது என்பதை நம்புங்கள். குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரும் சினிமாவைக் கொண்டாடுவோம்.
80725 89355 என்ற செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்பிவையுங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
ஆசிரியர் : எம்.நிர்மல்
பதிப்பகம் : ஞானகுரு பதிப்பகம்
பக்கம் : 440
விலை : ரூபாய் 600
