பெண்களிடம் ஜாக்கிரதை
பொதுவாகவே ஆண்களின் மனநிலை, பலம், பலவீனம் போன்றவற்றை பெண்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆண்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களுக்குத் தேவையான காரியத்தை பெண்கள் சாதித்துக் கொள்கிறார்கள்.
குடும்பத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று அம்மா, மனைவி அழுதால் ஆண்களால் தாங்கமுடியாது. அரபு நாடுகளுக்குப் போய் அடிமை போன்று அழுதுகொண்டே வேலை பார்த்தாலும், அதை வெளியே சொல்லாமல் பணம் அனுப்புவார்கள்.
தம்பி, தங்கைகளை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணனிடம் சொல்லிவிட்டால், தன்னுடைய படிப்பு, கல்யாணம் போன்றவைகளை தியாகம் செய்துவிட்டு அவர்களுக்காக உழைத்துக் கொட்டுவான்.
என்னை ஒருத்தன் தப்பா தொட்டுவிட்டான் என்று பெண் குற்றம் சாட்டினால், எந்த விசாரணையும் செய்யாமல் அரிவாளால் அவனை வெட்டிவிட்டு ஆண்கள் ஜெயிலுக்குப் போய்விடுகிறார்கள்.
தனக்காக எதுவுமே செய்துகொள்ளாத ஆண், குடும்பத்திற்காக எப்படிப்பட்ட தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறான். இந்த ஆணின் சைக்காலஜியைப் பெண்கள் புரிந்து வைத்திருப்பதாலே, ஈஸியாக ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆண்கள் சுதாரிக்க வேண்டும். குடும்பத்துக்காக எத்தனை கஷ்டப்பட்டாலும், தங்கள் மகிழ்ச்சிக்கு ஆண்கள் நேரமும் பணமும் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். தனக்குப் போகவே தானமும் தர்மமும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
