இங்கே பிழைக்க முடியாதவர்கள்தானே வெளிநாடு போகிறார்கள்..?

ஞானகுரு பார்வை

கேள்வி : முதியோர் இல்லங்கள், அனாதை காப்பகங்கள் அன்பின் பிரதிபலிப்பா… அன்பின்மையின் அடையாளமா..?

  • பி.செண்பகக்கனி, கல்குறிச்சி.

ஞானகுரு :

ஒரு விபத்து, திடீர் மரணம், இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்களால் எத்தகைய மனிதரும் திடீரென அனாதையாக, கைவிடப்பட்டவராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, முகம் தெரியாதவர்களை அரவணைக்கத் தொடங்கப்படும் எல்லாமே அன்பின் அடையாளங்களே.

கேள்வி : விஜயதசமி அன்று கற்பித்தலை தொடங்குவது ஏன்..?

  • கே.நாகரத்தினம், குமார், சத்திரரெட்டியாபட்டி.

ஞானகுரு :

கடவுளின் பெயரைச் சொல்லி நடைபெறும் எல்லா செயல்களும், பண்டிகைகளும், விழாக்களும் பணம் ஈட்டும் வழிமுறை மட்டுமே. வெளிநாட்டினரும், மற்ற மதத்தினரும் விஜயதசமி அன்று கல்வி கற்கத் தொடங்குவதில்லை, அவர்களுக்கும் கல்வி அறிவு கிடைக்கிறதே.

கேள்வி : தாய் நாட்டை விட்டு அயல் நாட்டுக்கு பொழப்பு தேடிப் போவது சரியா..?

  • எம்.மதன், வண்ணாரப்பேட்டை.

ஞானகுரு :

குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழியாகவே வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறார்கள். இதற்காக இளமை, உறவு, அன்பு, பொழுதுபோக்கு, திருவிழா, கொண்டாட்டம், ஆரோக்கியம் என எத்தனையோ விஷயங்களை அவர்கள் இழக்கிறார்கள். எனவே இதில் சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் மனநிலை, குடும்ப சூழல் போன்றவற்றின் அடிப்படையிலானது. ஒருவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும், ஒருவருக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பது போன்ற சமாச்சாரமே இது.

Leave a Comment