ஹுயூமன் மெடிசின் இருக்கிறதா..?

இதைவிட பெஸ்ட் வேறு எதுவும் இல்லை

மருத்துவத்தில் ஹூயூமன் மெடிசின் என்பது இப்போது ரொம்பவே பாப்புலர். ஹூயுமன்னா மனிதர்… மெடிசின்ன்னா மருந்துன்னு எல்லோருக்குமே தெரியும். அதென்ன ஹூயூமன் மருந்து..?

கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் மனிதர்களே ஹூயூமன் மெடிசின்.

என்ன பிராப்ளம் இருந்தாலும், கவலை இருந்தாலும் ஒரு சிலரை பார்த்தவுடன் டானிக் குடித்தது போன்று எனர்ஜி கிடைக்கும். அவரிடம் மனதில் இருப்பதை எல்லாம் ஃபில்டர் செய்யாமல் கொட்ட முடியும். அவரிடம் பேசினால் மனதில் இருக்கும் பாரம் குறைந்துவிடும். இப்படிப்பட்ட மனிதர்களே ஹூயூமன் மெடிசின். உங்களுக்கு எத்தனை பேர் ஹூயூமன் மெடிசனாக இருக்கிறார்களோ, அத்தனை தூரம் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

உங்களுக்கு யார் ஹூயூமன் மெடிசன் என்று தேடுவதற்கு முன்பு, நீங்கள் எத்தனை பேருக்கு ஹூயூமன் மெடிசினாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நான்கு பேருக்காவது நீங்கள் ஹூயூமன் மெடிசின் என்றால் உங்கள் லைஃப் ரொம்பவே அர்த்தமுள்ளது.

இப்போது நீங்கள் ஹூயூமன் மெடிசனாக இல்லை என்றாலும் இந்த ஐந்து குணங்களை வளர்த்துக்கொண்டால் நீங்களும் ஹூயூமன் மெடிசனாக மாறிவிட முடியும்.

  • பிறருக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கத் தயாராக இருங்கள். அவசர வேலை இருந்தாலும் நிலைமையை புரிந்துகொண்டு பேசுங்கள்.  
  • பிறர் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள். விவாதமும், விமர்சனமும் செய்யாதீர்கள்.
  • யாருடைய செயலையும் சரி, தவறு என்று ஜட்ஜ்மெண்ட் செய்யாதீர்கள்.
  • ஒருவர் சொல்லும் விஷயங்களை எந்த காரணத்துக்காகவும் பிறரிடம் பகிராமல் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.   
  • எந்த ஒரு முடிவும் நீங்கள் எடுக்காதீர்கள். அவர்களை எடுக்கத் தூண்டுங்கள். ஆதரவாக நில்லுங்கள்.

இந்த ஐந்து குணங்களையும் வளர்த்துக்கொண்டால் நிறைய பேருக்கு ஹூயூமன் மெடிசனாக இருக்க முடியும். உங்களுக்கும் நிறைய பேர் கிடைப்பார்கள். நிறைய ஹூயூமன் மெடிசன் உள்ள நபர்களுக்கு ஸ்ட்ரெஸ், டென்ஷன் நெருங்கவே செய்யாது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment