நிஜம் என்ன நிழல் என்ன
ரஜினிகாந்த் என்ன பேசினாலும் வைரலாகிறது. சர்ச்சையாகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது விஜய் மீதான பொறாமை என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கொதிக்கிறார்கள்.
தர்மன் விழாவில் ரஜினி, ‘’நான் பேசுனாலே Problemதான்.. எனக்கும் Problem, மத்தவங்களுக்கும் Problem.. நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதேபோல், நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடித்துவிடும் என்று நினைப்பதும் முட்டாள்தனம். இதை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்…’’ என்று பேசியிருக்கிறார்.
இதில், நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடித்துவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்று ரஜினி பேசியது விஜய்யின் இல்லீகல் காதல் விவகாரத்தை குறிப்பிடுவதாகக் கொதிக்கிறார்கள்.
விஜய் பதவிக்கு வந்ததும் அவரை நேரில் போய் சந்திக்காமல் ஸ்டாலினைப் போய் பார்த்தார் ரஜினி. விஜய் பிறந்தநாளுக்கு போனில் வாழ்த்து சொல்லிவிட்டதாகக் கூறி சமாளித்தார்.
ரஜினியால் விஜய் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை, அதனால் பொறாமையில் விமர்சிக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கண்டிக்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா..?
ஒவ்வொரு பட விழாவிலும் ரஜினிகாந்த் இப்படி ஏதாவது பேசி சர்ச்சையைக் கிளப்புவார். அது, படத்திற்கு புரமோஷனாக அமையும். இந்த டெக்னிக்கை காலம்காலமாக கடைப்பிடிக்கிறார். இது ஒரு வியாபார டெக்னிக்.
அதேநேரம், வதந்திகளை விட உண்மைகள் தெளிவானவை. ரஜினிகாந்த் பேசியதை நேரடி அர்த்தமாகப் புரிந்துகொள்வதே முதிர்ச்சியான அணுகுமுறை. இதனை அரசியலுடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
