மம்முட்டிக்கு இப்படி ஒரு பிரச்னையா..?

ஆப்பிளும் வெங்காயமும் ஒரே சுவை

சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. ஃபில்டர் காபிக்கும் வெந்நீருக்கும் வித்தியாசம் தெரியாது. ஹோட்டலுக்குப் போய் வெரைட்டியாக சாப்பிட வேண்டிய அவசியமிருக்காது.

நாக்கு என்பது வெறும் சுவைக்கான உறுப்பு மட்டுமல்ல; அது நமது வாழ்க்கைத் தரம், பாதுகாப்பை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான சென்சார். சுவை உணர்வு முற்றிலுமாக இல்லாவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

நமக்கு மிகவும் பிடித்த பிரியாணியாக இருந்தாலும் சரி, அல்லது வெறும் கஞ்சியாக இருந்தாலும் சரி, இரண்டுமே நாவிற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உணவு என்பது அதன் ருசிக்காக உண்ணப்படுவதை நிறுத்திவிட்டு, வெறும் உயிர்வாழ்வதற்கான ஒரு சடங்காக மாறிவிடும். மெல்லுவது என்பது ஒரு வேலையாகத் தோன்றும்.

நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் டோபமைன் எனும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பது குறையும். இது உணவின் மீதான ஆர்வத்தையே போக்கிவிடும்.

சுவை என்பது இயற்கை நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம். அதாவது பால் புளித்துப்போயிருந்தால் அல்லது உணவு கெட்டுப்போயிருந்தால் வாயில் வைத்தவுடன் கண்டுபிடித்துத் தவிர்க்க முடியும். சுவை இல்லையென்றால், விஷத்தன்மை வாய்ந்த அல்லது கெட்டுப்போன உணவை நாம் அறியாமலேயே உட்கொள்ள நேரிடும்.

சுவை தெரியவில்லை என்றால் உணவில் அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரையை எடுத்துக்கொள்வார்கள். இது ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்

சிலருக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்பட்டு உடல் எடை குறையும் சிலருக்குத் திருப்தி கிடைக்காததால் அளவுக்கு அதிகமாக உண்டு உடல் எடை கூடும் இதனால் மனச்சோர்வும் உண்டாகும்.

இப்படி சுவை உணர்வு இல்லாமல் போவதும் ஒரு நோய். நடிகர் மம்முட்டி இந்த பிரச்னையில் இருந்துதான் மீண்டு வந்திருக்கிறார்.

மேலும்,

  • நடிகர் ராணா டகுபதியின் மறுபிறவி சிகிச்சை
  • எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் ஆரோக்கிய அனுபவம்
  • சுகர், பல்ஸ், ரத்த அழுத்தம் வாட்சில் பார்க்கிறீர்களா..?
  • எவ்வளவு நேரம் தூங்குறீங்க..? ஸ்லீப் மெடிசின்

இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யங்களுடன் வெளியாகிறது

ஞானகுரு யாக்கை மின்னிதழ்

அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியம் பரப்புங்கள்.

Leave a Comment