சித்தர் தத்துவம்
சித்தர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சித்தர்கள் பிறந்த இடம், சமாதியை தேடிச்சென்று வணங்குகிறார்கள். சித்தர்களின் வைத்தியக் குறிப்புகளை தேடித்தேடி படிக்கிறார்கள்.
அதேநேரம், சித்தர்கள் எழுதிய பாடல்களில் இருக்கும் தத்துவத்தை மட்டும் அறிந்துகொள்வதற்கு அக்கறை காட்டுவதே இல்லை.
சிவவாக்கியரின் ஒரே ஒரு பாடலைப் படியுங்கள், வாழ்க்கையின் புதிர் விலகும்.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
- சிவவாக்கியர்.
இது தானுங்க அர்த்தம்.
சமைக்கும் உணவின் சுவையும் பாத்திரமும் கரண்டியும் அறிந்துகொள்ளாது. அதுபோல், பரம்பொருள் உன் மனதுக்குள் இருக்கும்போது, அதைவிட்டு, சிற்பியினால் வடிக்கப்பட்ட கல்லை பரம்பொருள் என்று நம்பலாமா? அதற்கு மலர்கள் சூடுவதாலும், மந்திரம் சொல்வதாலும், அந்த கல் பேசுமா..?
அதாவது, ஒவ்வொரு மனிதரின் மனதுக்குள்ளும் கடவுள் இருக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால் மனசுக்குள் மட்டுமே தேடுங்கள். தங்கச்சுரங்கமே உள்ளே இருக்கிறது என்கிறார்.
தேடுங்கள், கண்டுபிடியுங்கள்.
