ஞானகுரு கவுன்சிலிங்
முதல் பிள்ளை 10 வயது ஆனபிறகு இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொள்ள சிலர் திட்டமிடுகிறார்கள். 10 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலான இடைவெளியில் இரண்டாவது குழந்தை பெறுவது நன்மைகளை விட சிக்கல்கள் அதிகம்.
முதல் குழந்தைக்கு 10 வயது என்றால் பொதுவாக பெண்ணுக்கு 35 வயது ஆகியிருக்கும். குழந்தை பெறுவதற்கு 25 வயதில் உடல் தயாராக இருப்பது போன்று 35 வயதில் இருப்பதில்லை. எனவே, இயற்கையாக குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகலாம். செயற்கை குழந்தை உருவாக்குவதற்கு பணம் செலவழிக்கும் நிலை ஏற்படலாம்.
தாய்க்கு 35, தந்தைக்கு 40 வயது இருக்கும்போது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புகள் எட்டிப் பார்க்கின்றன. எனவே, இந்த வயதினர் பெற்றுக்கொள்ளும் பிள்ளைக்கு, பரம்பரை நோய்கள் சின்ன வயதில் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
இளம் வயதில் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்து குழந்தையை கவனிப்பது ஈஸியாக இருக்கும். அதுவே 35 வயதுக்கு மேல் கண் விழிப்பதும், பராமரிப்பதும் சிரமமாகவும், தொந்தரவாகவும் தெரியும்.
பொதுவா 10 வயது முதல் பிள்ளைகள் இன்னொரு பிள்ளை வர்றதை ஈஸியா அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. தன்னோட இம்பார்ட்டன்ஸ் குறைஞ்சிடும்னு நினைப்பாங்க. அதனால் இரண்டாவது பிள்ளை மேல வெறுப்பு, கோபம் வர அதிக சான்ஸ் உண்டு. தன்னை பெற்றோர் கைவிட்டதாவும், தனியே இருக்கிறதா நினைச்சு அழலாம்.
இப்படிப்பட்ட சூழலில், முதல் பிள்ளையை உணர்வுபூர்வமாக முன்கூட்டியே ரெடி பண்ணனும். அதாவது உன் கூட விளையாட ஒரு பிள்ளை வரப்போகிறது, நீ தான் நல்லா பார்த்துக்கணும். விளையாட்டு காட்டணும். நீ பொறுப்பா அம்மாவுக்கு ஹெல்ப் செய்யணும்னு சொல்லி, முதல் பிள்ளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்.
சின்னப் பிள்ளையைக் கொஞ்சும் நேரத்தில் பெரிய பிள்ளையையும் சேர்த்துக் கொஞ்சணும். அதிக வயது வித்தியாசத்தினால் இரண்டு பிள்ளைகளுக்கும் சண்டை வர்றதுக்கு வாய்ப்பு குறைவுங்கிறது ஒரு நன்மை.
எனவே, இரண்டாவது பிள்ளை வேண்டுமா, எத்தனை ஆண்டுகள் இடைவெளியில் வேண்டும் என்பதை எல்லாம் தம்பதியர்கள் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு குழந்தை போதும் என்றால் நல்லது. இரண்டு குழந்தை வேண்டும் என்றால் அதுவும் நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
