ஆசையிலும் நேர்மை இருந்தால் ஜெயிக்கலாம்

ஞானகுரு தரிசனம்

கேள்வி : இந்த உலகில் நிலையானது என்றால் என்ன… ஏன்..?

– பி.துரைப்பாண்டி, மார்டன் நகர்.

ஞானகுரு :

எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும் என்ற தத்துவம் மட்டுமே நிலையானது.

…………..

கேள்வி : ஆசை அழிவுக்கு வித்திடுமா அல்லது அந்தஸ்துக்கு வழிவகுக்குமா..?

– ஜி.சரவணன், சாத்தூர்.

ஞானகுரு :

கோடீஸ்வரனாக வேண்டும் என்ற ஆசையில் கூடுதலாக உழைத்து, பணத்தை சேமித்து வைத்து, சரியான வழிகளில் முதலீடு செய்கிறான் என்றால் அது மேன்மை தரும் ஆசை. அதே மனிதன் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காக திருடுவதற்கும், பிறரை ஏமாற்றி சம்பாதிப்பதற்கும் முடிவெடுத்தால் அது அழிவுக்கு வழி வகுக்கும். எனவே, நேர்மையாக ஆசைப்பட கற்றுக்கொள்ள வேண்டும்.  

Leave a Comment