• Home
  • யாக்கை
  • இனிப்பு ருசியை கட்டுப்படுத்தும் வழி

இனிப்பு ருசியை கட்டுப்படுத்தும் வழி

Image

மாயா சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால்
சாக்லேட், பிஸ்கட் என எப்போதும் இனிப்பு அவளிடம் இருந்துகொண்டே இருக்கும். அதனாலோ என்னவோ,
35 வயதிலேயே சர்க்கரை நோயாளி ஆகிவிட்டாள்.

சர்க்கரை நோய்க்குப்பிறகும் இனிப்பு சாப்பிடுவதை கைவிட
முடியாமல், மருத்துவரிடமும் கணவரிடமும் எப்போதும் திட்டு வாங்கிக்கொண்டே இருந்த நிலையில்,
ஞானகுருவை சந்தித்தாள். தன்னுடைய இக்கட்டான நிலைமையைத் தெரிவித்தாள்.

நீ இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் அதில் தவறே இல்லை,
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. உனக்கு எந்த விலங்கு நிரம்பப் பிடிக்கும் என்று கேட்டார்.

‘’நாய் எனக்கு மிகவும் பிடிக்கும், நாயுடன் விளையாடுவது
ரொம்பவும் பிடிக்கும்’ என்றாள்.

‘’சரி, நீ இனிப்பு சாப்பிட விரும்பும் நேரத்தில் எல்லாம்
அந்த நாயை மட்டும் நினைத்துக்கொள். ஆனால், அந்த நாய் இன்னும் 20 வருடங்களில் எப்படியிருக்கும்
என்பதை மட்டும் யோசித்து, அதை நினைத்துக்கொண்டே சாப்பிடு..’

‘இருபது வருடங்களா? அதற்குள் செத்துவிடும். அப்படியில்லை
என்றால் அந்த நாய் கிழடாகி, பார்க்கவே கொடூரமாக சகிக்க முடியாமல் இருக்குமே.. அதை எப்படி
நினைத்துக்கொண்டு சாக்லேட் சாப்பிடுவது?”

‘’இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால், நீயும் 20
வருடங்கள் கழித்து அப்படித்தான் இருப்பாய். இனிப்பு மட்டுமல்ல, எந்த ஒரு விஷயம் நீ
செய்வதாக இருந்தாலும், அதன் பலன் 20 வருடங்கள் கழித்து எப்படியிருக்கும் என்று யோசித்துப்
பார். அதன்பிறகு அந்த காரியத்தை செய்.

இனி, நீ எவ்வளவு இனிப்பு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஆனால், அந்த நேரத்தில் உன் கிழட்டு நாயை கற்பனை செய்வதை மட்டும் மறந்துவிடாதே’  என்றபடி கிளம்பினார் ஞானகுரு.

20 வருடங்கள் கழித்து நீரிழிவு நோயுடன் தான் எப்படியெல்லாம்
அவஸ்தைப்பட நேரிடலாம் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தாள். அந்த கிழட்டு நாயைவிட,
மோசமான நிலையாக இருந்தது.

அதனாலோ என்னவோ, அதன்பிறகு இனிப்பு சாப்பிட ஆசை வரவே
இல்லை.

Leave a Comment