எத்தனை ஆண்டு மனிதரால் உயிர் வாழ முடியும்..?

ஆச்சர்ய ஆய்வு முடிவு

மனிதருக்கு வரும் அத்தனை கொடிய நோய்களையும் முழுமையாகக் குணப்படுத்தினால், ஒரு மனிதரால் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

டி.என்.ஏ மரபணு மாற்றங்களே ஆயுட்கால எல்லையைத் தீர்மானிக்கிறது. எனவே, மனித உடல் அதிகபட்சமாக 146 முதல் 194 ஆண்டுகள் வாழ முடியும் என்று இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மூளை மற்றும் இதயத்தின் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில்லை. எனவே, இந்த உறுப்புகளே ஆயுளை நீட்டிப்பதற்குத் தடையாக உள்ளன. அதேநேரம், கல்லீரல் தொடர்ச்சியான செல் மீளுருவாக்கத் திறன் கொண்டதாக இருப்பதால், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட இயங்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மனித ஆயுளை அதிகப்படுத்தும் அறிவியல் முயற்சிகளுக்குப் பெரும் வழிகாட்டியாக அமையும் என்கிறார்கள்.

Leave a Comment