என்ன செய்தார் சைதை துரைசாமி – 458
மேயராகப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தன்னுடைய பணியைத் தொடங்கி அசத்தினார் மேயர் சைதை துரைசாமி. அதேபோன்று அதிகாலையில் களப்பணி என்ற புதிய பாணியைத் தொடங்கியபோதே, சைதையாரின் தனித்தன்மையை அதிகாரிகள் உணர்ந்து கொண்டனர்.
அதன் அடிப்படையில் இரவும் பகலுமாக மாநகராட்சி வளர்ச்சிக்கு உழைத்துக்கொண்டே இருந்தார். அது எந்த அளவுக்கு என்பதை இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பீட்டை பார்த்தாலே, சைதை துரைசாமியின் செயல்திறன் தெளிவாகப் புரியவரும்.
5 ஆண்டு கால ஒப்பீடு
| விபரம் | மு.க.ஸ்டாலின் | மா.சுப்பிரமணியன் | சைதை துரைசாமி |
| கள ஆய்வுகள் மற்றும் மொத்த ஆய்வுக் கூட்டங்கள் | 447 | 790 | 10,123 |
| மாநகராட்சிப் பணிகளுக்கு செலவழித்த மொத்த தொகை | ரூ.534 கோடி | ரூ.1,665 கோடி | ரூ.16,541 கோடி |
| செய்துமுடித்த பணிகளின் எண்ணிக்கை | 8,328 | 9,576 | 3,02,878 |
இந்தப் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போதே, மற்றவர்களைவிட எத்தனை மடங்கு அதிகமாக சைதை துரைசாமி பணியாற்றியுள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடியும். இதற்கு மேல் அத்தாட்சி வேண்டியதில்லை என்றாலும், இன்னும் இருக்கின்றன சைதை துரைசாமியின் அழிக்கமுடியாத சாதனைகள்.
- நாளை பார்க்கலாம்.
