மெடிக்கல் மிரக்கிள்
ஃபேன்டஸி திரைப்படங்களில் எலும்பு முறிவுக்கு ஜெல் தடவிக்கொண்டதும், அது ஒட்டிக்கொள்வது போன்று காட்சிகள் வருவதுண்டு. அந்த கற்பனைக் காட்சி இப்போது கிட்டத்தட்ட நிஜமாகியுள்ளது.
எலும்பு முறிவுகளை விரைந்து குணப்படுத்தும் எலும்பு ஜெல்லை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாவுக்கட்டு, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் உலோகத் தகடுகளுக்கு மாற்றாக இந்த ஜெல்லைப் பயன்படுத்த முடியும்.
எலும்பின் இயற்கை கட்டமைப்பு போன்று வடிவமைக்கப்பட்ட உயிரிப் பொருட்களால் ஆன ஜெல்லானது, எலும்பு செல்களைத் தூண்டி, முறிந்த இடத்தைச் சீராக வளரச் செய்கிறது. எலும்பு முழுமையாகக் குணமடைந்ததும் இந்த ஜெல் தானாகவே உடலில் கரைந்துவிடும். இதனால் உலோகத் தகடுகள் வைக்கவேண்டியதும், அகற்ற வேண்டியதும் அவசியம் இல்லை. அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதால் அடுத்த ஆண்டு முதல் ஜெல் சிகிச்சை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
