அஜித் ரசிகர்கள் கனிவான கவனத்திற்கு…

அழாதீங்க ப்ளீஸ்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் எதிரிகள் போன்று விஜய்யும் அஜித்தும் சினிமாவில் மோதிக்கொண்டு இருந்தார்கள். ரசிகர்களின் மோதலை ரசித்தார்கள். இப்போது சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தளத்தில் இருவரும் சந்தித்து, கட்டிப்பிடித்து அன்பால் உருகிய காட்சிகள் வைரலாகியுள்ளன.

இந்த சந்திப்பை விஜய் ரசிகர்கள் மாஸ் மூவ் என்றும் அஜித்துக்கு மரண அடி என்றும் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், அழைப்பு விடுத்தது அஜித். விஜய் வந்ததால் போட்டிக்கு உலக அளவில் கவனம் கிடைத்திருக்கிறது, டிக்கெட் முழுமையாக விற்றுத்தீர்ந்ததில் அஜித்துக்கு லாபம்.

அதேநேரம் அஜித் ரசிகர்கள் பரிதாபமாகப் புலம்புகிறார்கள். அஜித்துக்காக விஜய் ரசிகர்களுடன் சண்டைகள் போட்டோம். கொச்சை பேச்சு, அவமானத்தை தாங்கிக்கொண்டோம். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற அஜித் கொள்கைக்கு பெருமைப்பட்டோம். ஆனால், விளம்பரத்தில் நடித்து எங்களை அவமானப்படுத்தினார். ஆனாலும், கார் பந்தயச் செலவுக்கு என்று சமாதானப்படுத்திக்கொண்டோம்.

இப்போது கார் ரேஸ்க்கு சம்பந்தம் இல்லாத விஜய்யை கூட்டி வந்து இருவரும் கட்டிப்பிடித்துக் கொஞ்சுகிறார்கள். அப்படியென்றால் எதிரிகள் என்பது வசூலுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மாயையா..?

இத்தனை காலம் அஜித்துக்காக நின்ற விஸ்வாசம் வலிக்கிறது, விஜய் ரசிகர்கள் எங்களை ட்ரோல் செய்கிறார்கள். ரசிகர்கள் என்றால் முட்டாள்களா..?  என்று வேதனையுடன் அழுது புலம்புகிறார்கள்.

அஜித் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். விஜய்யும் அஜித்தும் சேர்ந்து உங்களை முட்டாளாக்கவில்லை. நீங்கள்தான் முட்டாளாக இருந்தீர்கள். நடிகருக்கு அடிமையாக இருப்பதும் ரசிகராக இருப்பதும் முட்டாள்தனம். என்பதை எப்போது புரிந்துகொண்டீர்களோ, அப்போதே தெளிவாகி விட்டீர்கள். நல்ல சினிமாக்களை ரசியுங்கள். நல்ல நடிகர்களை பாராட்டுங்கள். யாரையும் கொண்டாட வேண்டாம், வருத்தப்படவும் வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment