பிள்ளையை புத்திசாலியா வளர்க்கணுமா..?

பேரண்டிங் டிப்ஸ்

எல்லோருக்கும் பிள்ளையை புத்திசாலியா வளர்க்க ஆசை இருக்கும், ஆனா என்ன வழின்னு தெரியாம தவிப்பாங்க. பிள்ளைகளை புத்திசாலியாக்கும் வழிகளைத்தான் இப்போ பார்க்கப் போறோம்.

  • உங்கள் பிள்ளை புத்திசாலியாக மாறும் என்று முதலில் நீங்கள் நம்புங்கள். பிள்ளையிடம், ‘நீ புத்திசாலி’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருங்கள். இந்த வார்த்தை நேர்மறை விளைவுகளையும் நம்பிக்கையும் கொண்டுவரும்.
  • பிள்ளைங்க தானே எடுத்து சாப்பிடுற வயசு வந்த பிறகும் ஊட்டி விடுற பழக்கத்தை நிறுத்துங்க. வலது கையால் சாப்பிடவும் இடது கையால் தேவையான உணவு பொருட்களை எடுக்கவும் பழக்குங்க. பிள்ளைங்க சாப்பாட்டை பிசைந்து சாப்பிடும் செயல் ஒரு எக்சர்சைஸ் போன்று மூளை வளர்ச்சியைத் தூண்டும்.
  • குழந்தைகள் கேள்வி கேட்கும்போது பேசாம இரு என்று அடக்கிவைக்காமல் சரியான பதில்களை சொல்லி ஊக்கப்படுத்துங்கள். நிறைய கேள்விகள் கேட்கும் பிள்ளைகள் புத்திசாலியாக வளர்கின்றன.
  • செல்போன், கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு ஒரு சில விரல்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆகவே இரண்டு கைகளையும் பயன்படுத்தி பந்து பிடிப்பது, எறிவது, மரத்தில் ஏறுவது, இறங்குவது போன்ற வெளிப்புற விளையாட்டுகளில் ஒரு மணி நேரமாவது ஈடுபடுத்துங்கள்.   
  • படிப்பை குழந்தைகளுக்கு சவாலாக மாற்றாமல் மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள். கற்றுக்கொள்வதே முக்கியம், மதிப்பெண் இரண்டாம்பட்சம் என்பதை புரிந்துகொண்டால் படிப்பு பற்றி கவலை, அச்சம் ஏற்படாது. மூளை கிரியேட்டிவாக செயல்படத் தொடங்கும்.
  • தவறு செய்தால் கண்டிப்பும் சரியாகச் செய்தால் பாராட்டும் கிடைக்கும் என்பதை பிள்ளைக்குத் தெளிவாகப் புரிய வையுங்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையும் துணிச்சலும் தரும். இதுவே, புத்திசாலியாகமாறும்.

இந்த வகையில் வளர்த்துப் பாருங்கள், கண்முன்னே உங்கள் குழந்தையிடம் மாற்றத்தைக் காணலாம், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment