ஞானகுரு பதில்
கேள்வி : பந்தயக் குதிரையாக ஓடுபவர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்..?
- சி.கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை.
கேள்வி : என் தொழிலில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது, மூடிவிடலாமா.?
ஞானகுரு :
வெற்றி பெற்ற குதிரைக்கும் தோற்றுப்போன குதிரைக்கும் ஒரே அளவு தீவனமே கொடுக்கப்படுகிறது. எனவே, பந்தயக் குதிரையாக இலக்கு நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதற்கு ஆசைப்படாதீர்கள். இலக்கை நோக்கி நிதானமாகப் பயணிப்பதே போதும். அதுவே, வெற்றி தரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
…………………………….
- சி.பிரபாகரன், நாகர்கோவில்.
ஞானகுரு
இன்னும் அரை அடி ஆழத்தில் வைரம் இருக்கிறது என்பது தெரியாமல், தோண்டியது போதும் என்று முடிவு எடுத்து திரும்பும் மனிதர்களே அதிகம் தோல்வியை சந்திக்கிறார்கள்.
லாபம் கிடைக்கும் என்று கணக்கு போட்டே தொழில்கள் தொடங்கப்படுகின்றன. எல்லா தொழிலிலும் கணக்கு போட்டபடி சரியான நேரத்தில் லாபம் கிடைப்பதில்லை. இதற்கு உதாரணமாக இன்று மிகப்பெரிய பிராண்ட்களாக இருக்கும் நிறுவனங்களின் வரலாற்றைச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் சந்தையில் இருந்தே ஆப்பிள் வெளியே தள்ளப்பட்டது. கூகுள் ஒரு மில்லியனுக்கு விலை பேசப்பட்டது. அமேசான் முதல் ஏழு ஆண்டுகள் லாபமே ஈட்டவில்லை. டெஸ்லா திவாலாகிவிடும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அத்தனை நிறுவனங்களும் போராடியே ஜெயித்தார்கள்.
தொடர்ந்து லாபம் குறைகிறது, வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள் என்றால் தொழிலை மூடுவதா அல்லது மாற்றம் செய்வதா என்று ஆய்வு செய்யுங்கள். துறை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே ஒரு புதுமை செய்தாலே, ஒட்டுமொத்தமாக உங்கள் தொழிலின் பாதை மாறிவிடலாம்.
அதேநேரம், மன அழுத்தம் தாங்க முடியாத பட்சத்தில் தொழிலை மூடுவதும் நல்ல விஷயமே. எதுவாக இருந்தாலும் கடைசி வரையிலும் போராடிவிட்டு கை விடுங்கள். இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம் என்று எதிர்காலத்தில் வருத்தப்படக் கூடாது என்பதை மனதில் வைத்து முடிவெடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
