ஏப்ரல் 9 – 3டி பிறந்த நாள்
3டி எனப்படும் முப்பரிமாண சினிமா எல்லோரும் பார்த்திருப்போம். என்னன்னு
3டி படத்தை முப்பரிமாண சினிமா என்று ஏன் சொல்கிறார்கள்..? கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது சினிமாவில் பார்க்கும் எல்லாமே நிஜமாகவே நம் கண் முன் நடப்பது போன்று இருக்கும். அதாவது திரையில் படம் பார்க்கும் வகையில் இல்லாமல் நேரடிக் காட்சியாக இருக்கும்.
3டி படத்துக்கும் இன்றைக்கும் என்ன தொடர்பு?
இன்று, அதாவது 1953-ம் ஆண்டுதான் ஏப்ரல் 9 அன்றுதான் உலகில் முதன்முதல் 3டி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஹவுஸ் ஆஃப் வேக்ஸ் (House of Wax) என்ற சினிமாவை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு முன்னர் கருப்பு வெள்ளை சினிமாவில் 3டிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், முதன்முதலில் கலர் படத்தில், அதுவும் ஸ்டீரியாபோனிக் சவுண்ட்டுடன் வந்த திரைப்படம் இதுதான். இதற்கு முன்னர் மோனோ சவுண்ட் எஃபெக்ட் மட்டும்தான் சினிமாவில் பயன்படுத்தப்பட்டது.
நேரடியாக 3 டி சினிமா எடுக்கும்போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேமரா உதவியுடன் ஒரே காட்சியை பல்வேறு டெப்த்துடன் படம்பிடித்து, பின்னர் இணைத்து முப்பரிமாணக் காட்சியாக மாற்றுகிறார்கள். இப்படி அனைத்துக் காட்சிகளையும் படமாக்குவது கடினம், செலவும் அதிகம் என்பதால் ஒரு சில காட்சிகளை மட்டுமே ஆரம்பத்தில் படமாக்கி வந்தார்கள். ஆனால் இப்போது முழு சினிமாவும் 3டியாக படமாக்கப்படுகின்றன.
கண்ணாடி இல்லாமல் 3டி சினிமா பார்ப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாள் என்ற வகையில் இன்றைய தினத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் மை டியர் குட்டிச்சாத்தான் என்ற மாற்று மொழித் திரைப்படத்தில் சில காட்சிகள் மட்டும் 3டி முறையில் படமாக்கப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் பிறகு நிறைய முயற்சிகள் நடந்தாலும், 3டி படங்கள் தொடர் சக்சஸ் தரவில்லை என்பதால் தமிழில் யாரும் முயற்சி செய்வதில்லை.
