விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா
சொந்த நாட்டில் குற்றம் செய்துவிட்டு, வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்று ஜாலியாக வாழும் குற்றவாளிகள் உண்டு. இப்படி குற்றம் செய்பவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லக் கூடாத வகையில் தடுப்பதற்கு சட்டம் உள்ளது.
அந்த வகையில், காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க பயன்படுத்தப்படுவதுதான் லுக் அவுட் நோட்டீஸ்.

எல்.ஓ.சி. எனப்படும் லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றால் அவரை விமான நிலைய காவல்துறையினர் எளிதில் கைது செய்ய முடியும்.
இந்த லுக் அவுட் நோட்டீஸில் பல வகைகள் உண்டு.
- ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருந்தால் அவர் குறித்த தகவல்களை பெறுவதற்கும் அவரை கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.
- ப்ளாக் லுக் அவுட் நோட்டீஸ் என்பது அடையாளம் தெரியாத பிணங்களை கண்டறிய இன்டர்போல் சார்பில் வெளியிடப்படுவது ப்ளாக் லுக் அவுட் நோட்டீஸ்.
- குற்றம் தொடர்பான ஒரு நபரின் அடையாளம் இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்து அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து கூடுதல் தகவல்களை சேகரிக்க சர்வதேச காவல்துறையால் வெளியிடப்படுவது தான் ப்ளூ கார்னர் நோட்டீஸ்.
இந்த வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். சட்டம் குறித்த சந்தேகம் இருந்தால் 80725 89355 எண்ணுக்கு போன் செய்யுங்கள்.
