காமசூத்ரா சீக்ரெட்ஸ்
ஆணை விட பெண்ணுக்கு உணர்ச்சிகள் அதிகம் என்று காமசூத்ரா புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இது உடல் ரீதியிலும் உள்ளம் ரீதியிலும் உண்மை என்றே மருத்துவம் சொல்கிறது.
அதேநேரம், உடலில் தோன்றும் அதிகபட்ச உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளும் சக்தி ஆண்களை விட பெண்ணுக்கு நூறு மடங்கு அதிகம். அதனால் தான் உணர்ச்சிவசப்படும் ஆண்கள் பாலியல் குற்றங்கள் செய்வது போன்று பெண்கள் எதிலும் சிக்கிக்கொள்வதில்லை.
காம உணர்ச்சி மட்டுமின்றி பசி, வலி போன்றவைகளை தாங்கிக்கொள்ளும் சக்தியும் பெண்களுக்கு அதிகம். அதனாலே பிரசவ வலி அனுபவித்தாலும், அடுத்த கணத்தில் அதை மறந்துவிடுகிறார்கள்.
பெண்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் தன்மை உண்டு. ஒருவரது பார்வையை வைத்தே அவர் காதலில் விழுந்திருப்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதேபோல் சாப்பிட்டாச்சு என்று பொய் சொன்னாலும், பேசும் தொனியை வைத்தே சாப்பிடவில்லை என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். அதனாலே தவறு செய்யும் ஆண்கள் எளிதாக பெண்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
சாதாரணமாகப் பேசுவதை எல்லாம் ஆண்கள் நினைவில் வைத்துக்கொள்வதே இல்லை. ஆனால், பெண்கள் எல்லா பேச்சுக்களையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் சண்டை போடும்போது பத்து வருடத்திற்கு முன்பு ஆண் செய்த தவறுகளை எடுத்துச் சொல்லி அடக்குவார்கள்.
காதலிப்பதாக இருந்தாலும், விவாகரத்து செய்வது என்றாலும் சரி உணர்வுபூர்வமாக அணுகுவார்கள். முடிவு எடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். அப்படி முடிவு எடுத்துவிட்டால் ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள். எனவே, பெண்களின் உணர்வுகளுடன் ஆண்கள் விளையாடாமல் இருப்பதே நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
