சும்மா சிரிங்க சார்.
சமூகவலைதளத்தில் நீண்ட நாட்களாக சுற்றும் ஒரு சில நகைச்சுவை, எப்போது படித்தாலும் மீண்டும் சிரிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒன்று
டைவர்ஸ் ப்ளீஸ்
நீதிபதி : நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!… உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?
மனைவி : ஆமா பெரிய “காதல்!” நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், பேசுகிறார்… ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை… தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்…
கணவன் : இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், என் மீது சந்தேகப்படுகிறாள், முடியல மை லார்ட்… தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க…
நீதிபதி : சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது!?
கணவன் : இது என்ன கேள்வி…!!! என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட…
மனைவி : அது எப்படி! நியாயம்…!!! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுத்தவள் நான்! உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனும்மா…! முடியாது மை லார்ட்…
நீதிபதி : இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் .?
கணவன் ; ஐய்யா… நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா!
நீதிபதி ; ம்ம்! கேளுங்க!?
கணவன் ; ஐய்யா.. ATM மெஷின்ல கார்டு உள்ளே சொருகி பணம் வெளீயே எடுத்தப்பிறகு அந்த பணம் மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???
நீதிபதி அந்த கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி சுருண்டு கீழே விழுந்தார்
