தம்பதிகள் இதுக்கு வெட்கப்படக் கூடாது.

ஃபேமிலி சக்சஸ் டிப்ஸ்

கணவன், மனைவி உறவுங்கிறது ரயில் தண்டவாளம் போல எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டும். சின்ன விரிசல் விழுந்தாலும் அந்த குடும்பம் உடைந்துவிடும். கேட்பதற்கு வெட்கப்பட்ட காரணத்தாலே பல குடும்பங்கள் உடைஞ்சு போயிருக்குதுங்க. அதனால எப்படிப்பட்ட விஷயங்களில் கூச்சமே படக்கூடாது என்பதைத் தெரிஞ்சுக்கோங்க.

  • சண்டை நடப்பது சகஜம். யார் முதலில் மன்னிப்பு கேட்பது, யார் முதலில் பேசுவது என்ற வெட்கம், கூச்சம் தம்பதியருக்கு நடுவே இருக்கவே கூடாது.
  • நல்ல செயல்களைப் பாராட்டுவதற்கு கூச்சப்படவே கூடாது. நம்ம மனைவிதானே, நம்ம கணவர்தானே என்று நினைக்காமல் பாராட்ட வேண்டிய விஷயங்களை மனம் திறந்து பாராட்டவேண்டும்.
  • அந்த மூன்று நாட்களில் தனக்கு இருக்கும் அவஸ்தையை கணவரிடம் சொல்வதற்கு வெட்கப்படக் கூடாது.
  • படுக்கையறையில் தங்கள் விருப்பத்தைக் கேட்டுப் பெறுவதற்கு கணவன், மனைவி இருவருமே வெட்கப்படக்கூடாது.
  • பொது இடங்களில் கை கோர்த்து நடக்கவும், நண்பர்கள் முன்பு இணையரை அறிமுகப்படுத்துவதற்கு கூச்சப்படக் கூடாது.
  • ஏதேனும் தவறு நடந்துவிட்டால், அதை ஒப்புக்கொள்வதற்கு கூச்சப்படக்கூடாது.

வெட்கமும் கூச்சமும் இல்லாமல் கணவன், மனைவி இருவரும் நட்புணர்வுடன் பழகும்போது, அந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment