வயசு விசித்திரம்
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியிருக்கும், ‘பெத்தலகேம் குடும்ப யூனிட்‘ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சூப்பர்ஹிட் அடித்துள்ளது.
மமிதா பைஜூவின் துள்ளல், காதல், சிரிப்பு இன்றைய யூத்களை மயக்கியுள்ளது. வாழ்க்கையில் செட்டில் ஆனவர், வயதானவரை காதலித்து கல்யாணம் முடிப்பது நல்லது என்ற சிந்தனையை நிறைய கல்லூரி மாணவிகளிடம் மமிதா பைஜூ விதைத்துவிட்டார்.
அதனால் வயசு வித்தியாச காதல் பற்றி நிறைய காலேஜ் பெண்கள் பேசுகிறார்கள். இதில் என்ன தப்பு என்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அறியவேண்டிய ஐந்து உண்மைகள்.
- சினிமாவில் மட்டுமே சிம்பிள் லைஃப், ஜாலி நட்புவட்டம், அடிதடி, போதை எல்லாமே மகிழ்ச்சியாக இருக்கும். நிஜத்தில் இவை சாத்தியமேயில்லை.
- ஒரு தலைமுறை வயது வித்தியாசத்தில் இருவரின் ரசனை, சிந்தனை, பொழுதுபோக்கு, விருப்பம் எல்லாமே மாறும். ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் புரியாது.
- வயது, அனுபவம் காரணமாக தன்னை அறியாமலேயே மனைவியைக் கணவர் கட்டுப்படுத்துவார். இது சமத்துவ உறவைப் பாதிக்கும்.
- தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை வளர்ப்புக்கு ஆண் உடலில் சக்தி, சுறுசுறுப்பு குறையும். ஆண் நோய்க்கு பெண் அதிக சேவை செய்யவேண்டியிருக்கும். .
- பொதுவாக பெண்ணுக்கு ஆயுள் அதிகம். எனவே கடைசி 15 வருடங்கள் தனியே வாழவேண்டியிருக்கும் அல்லது புதிய துணை தேவைப்படும். .
இருவரிடமும் அன்பு, புரிதல், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் இந்தச் சிக்கல்களை எளிதாக சமாளிக்கலாம் என்று தோன்றலாம். ஆனால், நிஜ வாழ்க்கை கடினமானது. அதனால் வயது, அலைவரிசைக்கு ஏற்ற ஜோடியைத் தேடுவதே நல்லது. மமிதா பைஜூவைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
