பத்து வயது பிள்ளைக்கு டென்ஷன் வருமா..?

பேரண்டிங் டிப்ஸ்

இன்றைய Gen Z தலைமுறையினர் உரையாடலைக் கேட்டாலே அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. 10 வயது சிறுவன், சிறுமிகள் கூட ஸ்ட்ரெஸ், டென்ஷன், டிப்ரெஷன் என்று சர்வசாதாரணமாகப் பேசுகிறார்கள்.

இத்தனைக்கும் இவர்களுக்கு பசி, பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. கிழிந்த உடை, செருப்பு இல்லாத கால்களைப் பார்க்கவே முடியாது. ஃபேன், ஏசி, மெத்தை, டிவி போன்ற சொகுசுகள் எல்லோருக்கும் கிடைக்கிறது.

ஆனால், படிக்கச் சொன்னால், கேட்டதை வாங்கித்தரவில்லை என்றால்  டென்ஷனாகிறார்கள். மற்ற வீட்டில் பிள்ளைகள் எல்லாம் ஜாலியாக இருக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. என்னை மட்டும் டார்ச்சர் செய்கிறீர்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்து பெற்றோருடன் சண்டை போடுகிறார்கள்.

இவர்களுக்கு ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்தாலும் அதில் திருப்தி அடைவதில்லை, உடனே வேறு ஒன்றுக்கு ஆசைப்படுகிறார்கள். கிடைத்ததை அனுபவிக்கத் தெரியாத பிள்ளைகளை கண்டிப்பதால் விளைவுகள் மோசமாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட பிள்ளைகளிடம் பெற்றோர் மிகவும் உஷாராகவே பேச வேண்டும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் என்று பேசுவதைக் கேட்டு கொஞ்சமும் கோபப்பட வேண்டாம். அதற்கு என்ன காரணம் என்று கூலாக கேளுங்கள்.

பரீட்சை அல்லது நண்பர்களுக்குப் பயந்து சிலர் இப்படி நடக்கலாம். விரும்பிய பொருள் கிடைக்கவில்லை என்று கோபமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பேசச் சொல்லுங்கள். இப்போது வாங்கித்தர முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதை பொறுமையுடன் தெளிவாக விளக்குங்கள்.

அதன் பிறகும் கோபம், டென்ஷன் ஆகிறார்கள் என்றால் அதற்கும் கோபப்படாமல் கூலாக இருக்க கற்றுக்கொள்ளா வேண்டும். எத்தனை கத்தினாலும், கதறினாலும் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று பெற்றோர் கூலாகவே இருந்தால், பிள்ளைக்கு காரியம் சாதிக்க முடியாது என்பது புரிந்துவிடும். கூலாக இருந்தால் மட்டுமே இந்த பிள்ளைகளை ஈஸியாக ஹேண்டில் செய்ய முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment