பழகக்கூடாத மனிதர்கள் ஜாக்கிரதை

6 வகை மனிதர்கள்

இந்த உலகில் எல்லா மனிதரும் நல்லவர் தான். ஆனால், ஒருசில குணம் உள்ள மனிதரைக் கண்டால் விலகிவிடுங்கள். ஏனென்றால், அவரது குணம் உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளலாம். அதனால் வாழ்க்கையில் பழகாமல் தவிர்க்க வேண்டிய 6 வகை மனிதர்களை அறிந்துகொள்வோம்.

  1. பெற்றோரை பிறர் முன்பு அவமானப்படுத்துபவர், தரக்குறைவாக விமர்சனம் செய்பவருடன் ஒருபோதும் பழகாதீர்கள்.
  2. மூன்றாவது நபரைப் பற்றி புறணி பேசுபவரை மதிக்காதீர்கள். அவர் உங்களைப் பற்றியும் புறணி பேசுவார்.
  3. சட்டத்தை மதிக்காமல் செயல்படும் நபருடன் பழகாதீர்கள். அவரால் உங்களுக்கும் பிரச்னைகள் வரலாம்.
  4. செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் பொய் சொல்லி சமாளிக்கும் நபர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.
  5. நகைச்சுவை என்ற பெயரில் பிறரை உடல் ரீதியாக, மனம் ரீதியாக கேலி செய்பவர்களை மதிக்காதீர்கள்.
  6. பிறர் பெருமைப்பட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி பந்தா செய்பவர்களை பக்கத்திலும் சேர்க்காதீர்கள்.

இந்த குணங்கள் உள்ள நபர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். ஆகவே, இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment