ஞானகுரு பதில்
கேள்வி : திருமணத்திற்கு பெண் அமையவே இல்லை, முரட்டு சிங்கிளாக என் வாழ்க்கை முடிந்துவிடுமா..?
- பி.ராஜேஷ்குமார், மயிலம்.
ஞானகுரு :
பெற்றோர் அல்லது உறவினரிடம் பெண் தேடும் பொறுப்பைக் கொடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சில வரையறைகள் வைத்துக்கொண்டு, அப்படிப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்று தேடிப்பாருங்கள். யாராவது ஒருவர் உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றினால், நேரடியாக அவரிடம் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். அவர் ஏற்றுக்கொண்டால் நல்லது, இல்லையென்றால் அடுத்த பெண்ணைத் தேடத் தொடங்குங்கள்.
நிராகரிப்புகளுக்கு ஒருபோதும் வருத்தப்பட வேண்டாம். அதேநேரம் என்ன காரணத்திற்காக நிராகரிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு, அந்த குறைகளை சரிசெய்துகொள்ளுங்கள்.
நிராகரிப்பு என்பது தோல்வி அல்ல. எனவே மனம் தளராமல் முயற்சி செய்துகொண்டே இருங்கள், நிச்சயம் சரியான பெண்ணை தேர்வு செய்துவிட முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
