மெடிக்கல் மிரக்கிள்
ஒற்றை ரோஜா அழகு என்றால் இரட்டை ரோஜா அதை விட அழகு. ஒற்றைக் குழந்தை மகிழ்ச்சி என்றால் இரட்டைக் குழந்தைகள் என்றால் இரட்டை மகிழ்ச்சி.
இரட்டைக் குழந்தைகள் வளர்ப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும், இன்னொரு தடவை குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நிறைய பெண்கள் இரட்டைக் குழந்தைக்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆயிரத்தில் 15 பெண்ணுக்கே இயற்கையாக இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
பெண்ணுக்கு அரிதாக இரண்டு கரு முட்டைகள் வெளியாகலாம். இந்த இரண்டு கரு முட்டைகளிலும் இரண்டு ஆண் உயிரணுக்கள் நுழையும்போது இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றன. இப்படி. பிறக்கும் குழந்தைகள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது ஆணும், பெண்ணுமாக இருக்கலாம். ஆனால், இவர்கள் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கமாட்டார்கள்.
கருமுட்டைக்குள் உயிரணு நுழைந்தபின், ஏதேனும் காரணங்களால் சினை முட்டை இரண்டாகப் பிரியலாம். இப்படி உருவாகும் இரட்டைக் குழந்தைகள் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பார்கள்.
இயற்கையாக இல்லை என்றாலும் செயற்கை முறையில் அதாவது டெஸ்ட் டியூப் முறையில் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும். ஐவிஎஃப் சிகிச்சையில் நான்கைந்து சினை முட்டைகள் வெளிவரும் என்பதால் இரண்டுக்கும் மேற்பட்ட கருக்களை கர்ப்பப்பைக்குள் வைக்கிறார்கள். இவை அனைத்தும் வளர்ச்சி பெற்று இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உருவாகின்றன.
இவற்றில் ஆரோக்கியமான இரண்டு கருக்களை வளர வைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது. எனவே, இரட்டைக் குழந்தைக்கு ஆசைப்படும் பெண்கள் நவீன ஐவிஎஃப் சிகிச்சையை நாடுவதில் தவறில்லை. ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
