கோயிலுக்கு மொட்டை முடி காணிக்கை

கடவுளுக்குப் பிடிக்குமா?

சாமிக்கு முடி காணிக்கை கொடுப்பதை நன்றி செலுத்தும் வழிபாடாக செய்கிறார்கள். மொட்டை போடுவதால் அழகு, ஆணவம், அகந்தை, அடையாளம் அழிந்து, புதிய மனிதராக மாறுவதாக உணர்கிறார்கள். தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற எல்லாமே கடவுளுக்கு நன்றி செலுத்தும் பல்வேறு காணிக்கைகள்.

கடவுளுக்கு முடியை பரிசு கொடுப்பது சரியா என்று யோசித்துப் பாருங்கள். பிறந்ததில் இருந்தே எல்லா மனிதர்களும் முடியை வெட்டி குப்பையில்தான் போடுகிறார்கள். அப்படியொரு சாதாரண பொருளை கடவுள் காணிக்கையாகத் தருவது அபத்தமான செயல்.

ஆடு, கோழியின் தலையை வெட்டி கடவுளுக்கு பலி கொடுக்கிறார்கள். தன்னுடைய வேண்டுதலுக்கு மட்டும் முடியோடு நிறுத்திக்கொள்கிறார்கள். 

இந்த உலகில் இருக்கும் அனைத்தும் கடவுளின் படைப்பு. எனவே, அவரது படைப்பை எடுத்து அவருக்கே கொடுக்கத் தேவை இல்லை.

அவர் கொடுக்காத ஒன்றைக் கொடுங்கள். அதாவது அன்பு, மனிதநேயம் போன்ற பண்புகள் மனிதர்களே வளர்த்துக்கொண்டவை. இவற்றை சக மனிதரிடமும், கடவுளிடமும் காட்டுங்கள். இதுவே கடவுளுக்கும் மகிழ்ச்சி தரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment