கள்ளக் காதலும் நல்ல காதல்தான்.

காதலுக்கு புதிய இலக்கணம்

ஒரே ஒருவரை மட்டுமே காதலிக்க வேண்டும். அதுவே புனிதமான காதல் என்று மக்கள் நினைக்கிறார்கள்.  

காதலித்த நபரை பிரேக்கப் செய்துவிட்டு வேறு ஒருவரைக் காதலிப்பதும், துணையை விட்டு வேறு ஒருவருடன் பழகுவதையும் கள்ளக் காதல் என்று அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையில் கள்ளக் காதல் என்று ஒன்று இல்லவே இல்லை. யாருக்கு யார் மீது வந்தாலும் அது காதல்தான், கள்ளக்காதல் அல்ல.  

தாய்மை, நட்பு போன்று காதலும் ஒருவருக்கு மட்டுமே உரியது அல்ல. நான்கு குழந்தைகளிடம் அம்மாவால் ஒரே மாதிரி அன்பு செலுத்த முடியும். பத்து பேருடன் நட்பாக இருக்க முடியும். அதேபோன்று ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவரை காதலிக்க முடியும் என்பதே உளவியல் உண்மை.

அரசு விற்பனை செய்தால் நல்ல சாராயம், தனி நபர் விற்பனை செய்தால் கள்ளச் சாராயம் என்பது போன்ற ஏமாற்றுத்தனமே கள்ளக் காதல் என்ற வார்த்தை. எல்லா சாராயமும் கெட்ட சாராயம். எல்லா காதலும் நல்ல காதல்.

அதேநேரம், குடும்ப உறவு ஒன்றே ஒன்றுதான். மனைவி, கணவன் வந்தபிறகு மனதுக்குள் வரும் காதலை ஒளித்துவைப்பதே சரியானது.

உண்மையில் காதல் கலப்படம் இல்லாதது. கள்ளத்தனம் இல்லாதது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment