வேலைக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை
வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் நல்ல குடும்பத் தலைவிகள் என்றும் வேலைக்குச் செல்லும் அனைவரும் ஒழுக்கம் தவறியவர்கள் என்ற மனப்பான்மை காலம்காலமாக பொதுப்புத்தியில் ஊறியிருக்கிறது.
பெண்கள் வயல் வேலைக்குச் செல்வதை அனுமதிக்கும் சமூகம், ஊரைவிட்டு அல்லது நாட்டை விட்டு வேலைக்குச் செல்வதை மட்டும் ஒழுக்கம் கெட்ட செயலாகப் பார்க்கிறது.
ஒரு வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டு கணவன், பிள்ளைகள் என்று வாழும் பெண், வேறு வழியில்லாமல் அவர்களை நேசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள். அந்த அடிமைத்தனத்தை கற்புக்கரசி என்ற பாராட்டுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் நிறைய ஆண்களுடன் பழகுவதால் காதலில் விழுவதற்கும், திருட்டுத்தனமாக உறவு கொள்வதற்கும் அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அதனாலே ஒர்க்கிங் உமன் எல்லோரும் கெட்டவர்கள் என்கிறது இந்த சமூகம்.
குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களும் பிற ஆண்களுடன் ரகசியத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்களும் பிற ஆண்களை நெருங்கவிடாமல் வாழ்கிறார்கள்.
ஆகவே, ஒருவரது ஒழுக்கம், குணம் போன்றவை வேலைக்குச் செல்வதால் அல்லது வீட்டுக்குள் இருப்பதால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. வாய்ப்புகளே அதை தீர்மானிக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
