ஞானகுரு பதில்
கேள்வி : உண்மையாகவே பிறர் மீது பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்தும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா..?
- எம்.ரதி, மீனாட்சி நகர்.
ஞானகுரு :
எல்லா மனிதரும் சுயநலமிகள் என்பதே உண்மை. அதேநேரம், ஒவ்வொரு தாயும், தந்தையும் அவர்களுடைய பிள்ளைகள் மீது உண்மையான அன்பு செலுத்துகிறார்கள். தங்களை விட தங்கள் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்று அன்பு செலுத்துகிறார்கள். பிள்ளைகள் நலனுக்காக எதுவும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
அன்பு என்பது கொடுப்பது மட்டுமே தவிர, பிறரிடம் எதிர்பார்ப்பது அல்ல. இந்த வகையில் ஒன்று சேராத காதலர்கள், சூழலால் பிரிந்துவிட்ட நட்புகளும் அன்புக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்துபவர்களைத் தேடி அலையாதீர்கள். நீங்களே அன்பு செலுத்துபவராக மாறுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.
