நிறைய மார்க் வாங்கும் வழிமுறை

மாணவர்களுக்கு டிப்ஸ்

விடிய விடிய புத்தகம் படிப்பதால் மட்டும் அதிக மதிப்பெண் கிடைக்காது.  அதேபோல் புத்தகத்தில் அடிக்கோடு போட்டு அவற்றை மட்டும் திரும்பத்திரும்ப படிப்பது, படித்தவுடன் எழுதிப் பார்ப்பதும் முழு மதிப்பெண் பெறுவதற்கு அறிவியல்ரீதியாகப் பயன்படுவதில்லை.

நிறைய மதிப்பெண் வாங்குவதற்கு முன்று வழிகள் உள்ளன.

நம்மால் முழு மதிப்பெண் பெற முடியும் என்று நம்புவது முதல் பாயிண்ட். ஏனென்றால், மாணவர்களை நன்றாகப் படிப்பவர், ஆவரேஜ், மோசம் என்று பிரித்து வைக்கிறோம். இதை அந்த மாணவர்களும் நம்புகிறார்கள். இது உண்மை அல்ல, சரியான வழியைப் பின்பற்றினால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று சொல்ல வேண்டும், இதை மாணவரும் நம்பவேண்டும்.

இரண்டாவது சீரான இடைவெளியில் படிப்பது. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே படிப்பது மூளையில் நன்கு பதிவாகிறது. எனவே, இந்த அளவு படித்தவுடன் குறைந்தது ஐந்து நிமிடங்கள் மூளைக்கு ஒய்வு கொடுத்துவிட்டு, மீண்டும் படிக்க வேண்டும்.

படிப்பதை வெளியே கொண்டுவருவதே மூன்றாவது முக்கியமான வழி. படித்தது எத்தனை தூரம் மூளையில் பதிந்திருக்கிறது என்பதை சொல்லிப் பார்ப்பது அல்லது எழுதிப் பார்ப்பது மிகவும் முக்கியம். முழுமையாக சொல்லவும், எழுதவும் முடியவில்லை என்றால் சரியாகப் படிக்கவில்லை என்று அர்த்தம். மீண்டும் படித்து, மூளையில் பதிய வைக்க வேண்டும். எப்போதும் ஞாபகம் இருக்கும் வகையில் மூளையில் பதிய வைத்துவிட்டால், நிச்சயம் முழு மதிப்பெண் கிடைக்கும்.  மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment