புத்தர் உயிருடன் திரும்பி வந்தால்..?

யோசிச்சுப் பாருங்கள்

கெளதம புத்தரை எல்லோரும் இப்போது கடவுளாக கும்பிட்டு வருகிறார்கள். ஆனால், தன்னை கடவுளின் அவதாரம்னோ, கடவுளின் பிள்ளைன்னோ, கடவுளின் தூதுவன் என்றோ புத்தர் சொல்லவே இல்லை. தன்னை ஒரு மனிதன் என்றார். ஆத்மா, கர்மா என்று எதுவும் இல்லை என்றார்.

இந்த பூமியில் இருக்கும் எல்லா ரிலீஜன்களும் கடவுளை கும்பிடுவது மட்டுமே துன்பத்திற்கு திர்வு என்று வழி காட்டுகின்றன. ஆனால், கெளதம புத்தர் மட்டும் தான் ஒரு சைக்காலஜி டாக்டர் போல, ஆசை வைப்பதுதான் துன்பத்திற்குக் காரணம் என்று சொன்னார்.  

அதாவது நாம் விரும்பியது எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும், விரும்பாதது விலகியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார். ஏனென்றால், வாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை.

இவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, இந்த பொருள் இல்லாமல் மகிழ்ச்சி இல்லை என்பது போன்ற மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வர வேண்டும்.

அதோடு கடந்த காலத்தை பற்றிக் கொள்ளாமல், எதிர்காலத்தை கட்டுப்படுத்த நினைக்காமல் நிகழ்காலத்தை ரசித்து வாழ்வதே சரியான வாழ்க்கை என்கிறார் புத்தர். வேறு யாரும் உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, உங்களுக்கே நீங்களே ஒளியாக இருங்கள் என்றார் புத்தர்.

கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரையே இன்று கடவுளாக்கி, பெளத்தத்தை மதமாக்கிவிட்டார்கள். ஒருவேளை புத்தர் உயிர் பெற்று திரும்பிவந்தால் தன்னுடைய சிலைகளை உடைப்பதும், மதத்தை கலைப்பதும்தான் அவரது முதல் பணியாக இருக்கும். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment