தாய் மொழி பற்று முட்டாள்தனம்

உளவியல் உண்மை

மொழிப் பற்றுக்காக உயிரைத் தியாகம் செய்தது நமது தமிழ் இனம். இந்தித் திணிப்புக்கு எதிராக தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்தார்கள்.

இந்த மொழிப் பற்று குறித்து சில உண்மைகள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒருவர் பிறக்கும் இடம், வீடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே நாடு, மொழி போன்றவை அவருக்குச் சொந்தமாகிறது. எனவே ஒருவர் தமிழராக, கன்னடராக, ஒரியா மொழிக்காரராகப் பிறப்பது இயற்கை விபத்து மட்டுமே.

எந்த நிலத்தில் பிறந்தோமோ, அந்த இடத்தின் பெருமை பேசுவதில் தவறு இல்லை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய தமிழ் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக மற்ற மொழிகளை விட தமிழ் மொழி உயர்ந்தது என்று அர்த்தம் இல்லை. பொதுவாக எல்லா மொழிகளும் பிறரது புரிதலுக்கு மட்டுமே உரித்தானது. அதை தாண்டி எந்த பெருமையும் தேவையில்லை.

மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துபோகும் என்று சொல்வார்கள். அப்படி மொழியும் இனமும் அழிவதால் எதுவும் கெட்டுப் போகாது. உலகமெங்கும் ஒரு பொதுமொழி உருவாக வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இன்று இல்லையென்றாலும் அடுத்த நூற்றாண்டுக்குள் உலகில் ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே அத்தனை மனிதருக்கும் பொதுவானதாகவும், போதுமானதாகவும் இருக்கும்.

ஒரே மொழி அத்தனை மனிதருக்கும் பொதுவாக வந்துவிட்டால், இங்கே பிரிவினை குறைந்துவிடும். மொழிக்காக உயிர் விடும் முட்டாள்தனமும் மறைந்து போகும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment