அதிர்ச்சி தரும் உளவியல்
பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகை, தன்னுடைய உடல் அழகு பிறருக்கு எடுப்பாகத் தெரியும் வகையில் ஆடையைத் தேர்வு செய்கிறார். கவர்ச்சி காட்டுவதை ஆடை சுதந்திரம் என்று நம்புகிறார்கள். அதனாலே, மைதானத்தில் திடீரென அரை நிர்வாணமாக நுழைந்து சில பெண்கள் பரபரப்பு உண்டாக்குகிறார்கள். பெண்கள் விருப்பமான உடை அணிவதை ஆண்கள் தட்டிக்கேட்கத் தேவையில்லை என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், ஆண்களைக் கவரவே பெண்கள் ஆடையைக் குறைக்கிறார்கள் அல்லது அதிக அலங்காரம் செய்கிறார்கள். ஆண்கள் தங்கள் உடலைக் கண்டு மயங்குவதை தங்கள் அதிகாரமாகப் பெண் நினைக்கிறார்கள். அதேநேரம், தன் உடலை ஆண் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் முரண்பாடாகப் பேசுகிறார்கள்.
ஆடைக்குறைப்பு மூலம் உலகம் ஒரு பெண்ணை எடை போடுகிறது. ஆடையைக் குறைக்கும் பெண் படுக்கை அறையிலும் சுதந்திரமாக இருப்பார் என்று குற்றம் சுமத்துகிறார்கள். அதேநேரம் பெண்களின் ஆடையில்தான் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் இருப்பதாக ஒரு கூட்டம் நினைக்கிறது. பெண்ணின் கண்களைத் தவிர உடலின் எந்த பாகமும் வெளியே தெரியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது.
உண்மையில் ஆடை என்பது சம்ப்ந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் கருத்து சொல்லவோ, கண்டிக்கவோ ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆடைக் குறைப்பில் புரட்சியும் இல்லை, அவமானமும் இல்லை. அதேநேரம் குறைவான ஆடையுடன் வெளியே வரும் பெண்ணை ஆர்வத்துடன் பார்ப்பது ஆணின் இயற்கை குணம். நான் அறைகுறை ஆடையுடன் வந்தாலும் ஆண்கள் பார்க்கக்கூடாது என்று பெண் சண்டைக்குப் போவது அபத்தம்.
ஆடை என்பது அவரவர் விருப்பம் என்பதைப் புரிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
