அன்பை மனதில் பூட்டி வைக்காதீர்கள்

மந்திரச்சொல்

தங்கள் அன்பு, விருப்பத்தை வெளியே சொல்லத் தேவையில்லை, பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

புத்தகத்தைப் படிக்காமல் எதையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, உங்கள் அன்பை மனதில் மட்டும் பூட்டி வைக்காதீர்கள்.
ஒரு இனிய வார்த்தையாக,
ஒரு சிறிய உதவியாக,
ஒரு ஆறுதல் தரும் தோளாக,
ஒரு நேர்மையான செயலாக அதை வெளிப்படுத்துங்கள்.

அன்பு சொல்லப்படும்போது மகிழ்ச்சி தரும்;
செயலாக மாறும்போது வாழ்க்கைகளை மாற்றும்.

அன்பு என்பது உணர்வு மட்டும் அல்ல —
அது மற்றவரின் மனதை காயப்படுத்தாமல் வாழ கற்றுத்தரும் ஒரு வாழ்க்கை முறை.

அன்பு வெளிப்படையாகச் சொல்பவருக்கே நிறைய அன்பு திரும்பக்கிடைக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment