உங்கள் கைக்குட்டையில் பூஞ்சை இருக்கிறதா..?

டாக்டர் கு.கணேசன் எம்.டி.

நோய்க் கிருமிகள் எந்தெந்த ரூபங்களில் எப்படியெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதை அறிவோம்.

நம் உடலுக்கு எந்த நேரத்தில் என்ன பாதிப்பு வரும் என்று எந்த ஜோதிடர்களாலும் சொல்லமுடியாது. சிலருக்கு தோலில், நகங்களின், உள் உறுப்புகளில் திடீரென அரிப்பு, நிறமாற்றம், நமைச்சல் ஏற்படும். இந்தப் பாதிப்புக்கு பூஞ்சை தொற்றுதான் காரணம் என்பதை கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் மருத்துவ உலகம் கண்டறிந்தது.

பூஞ்சை தொற்று (fungal infection) உலகெங்கிலும் ஒவ்வோர் ஆண்டும் மில்லியன்கணக்கான மக்களைப் பாதிக்கிறது. பூஞ்சை தொற்று மைக்கோஸ் என்றும் அழைக்கப்படும். பூஞ்சை தொற்று பொதுவாக தோல், நகங்கள் அல்லது நுரையீரலை பாதிக்கும்.

பெரும்பாலான பூஞ்சைகள் பாதிப்பில்லாதவை. ஆனால், சில குறிப்பிட்ட நிலையில் நோய்களை ஏற்படுத்தலாம். பூஞ்சை தொற்று ஒருவரிடமிருந்தும், விலங்குகள், அசுத்த மண்ணிலிருந்து பரவும்.

கேண்டிடியாஸிஸ் என்பது கேண்டிடா எனப்படும் ஒரு வகை ஈஸ்ட் (பூஞ்சை) அதிகமாக வளர்வதால் ஏற்படும் ஒரு பூஞ்சைத் தொற்றாகும். இந்த ஈஸ்ட் பொதுவாக தோல், வாய், பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் இயற்கையாகவே வாழ்கிறது. நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, அது அதிகமாக வளர்ந்து தொற்றுநோயை ஏற்படுத்தும்.

சில வகை பூஞ்சை தொற்று தலைப்பகுதியை பாதிக்கும். நீரிழிவு நோய் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் போது கடுமையான அரிப்பு, வலி அல்லது முடி உதிர்தல் இருக்கும்.

பூஞ்சை தொற்று காரணங்கள்:

உடலின் மேல்பகுதியில் (அ) உடலின்  உள்ளே பூஞ்சைகள் வளர்ந்து பெருகும்போது பூஞ்சை தொற்று ஏற்படும். சிலருக்கு சுற்றுச்சூழலும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். பொது இடங்களில், கட்டுமானப் பணிகளின்போது வெறுங்காலுடன் நடப்பதாலும், மாசுபடுத்தும் காற்றில் இருந்து பூஞ்சையை சுவாசிப்பதாலும் ஏற்படலாம். •

பூஞ்சை தொற்று வராமல் இருக்க முன்னெச்சரிக்கைகள் உள்ளன. உடலில் பூஞ்சை வளரக்கூடிய வியர்வை நிறைந்த பகுதிகளையும் கால்விரல் இடைவெளிகளையும் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். பருத்தி துணிகளாலான, தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. ஈரமான ஆடைகளை, காலுறைகளை உடுத்தக் கூடாது. காலுறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

உடைகள், காலணிகள், ஒப்பனை சாதங்கள், சோப்பு, சீப்பு, கைகுட்டை போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கவனமாக இருப்பது நல்லது. நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூஞ்சை தொற்றுக்கு வீட்டு வைத்தியம்:  மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையைப் பயன்படுத்துவது பூஞ்சை தொற்றை குறைக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை சம அளவு தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ, இது பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும். தயிரில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியா பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராட உதவும். பாதங்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் 15 நிமிடம் ஊறவைத்தால் தடகள கால் போன்ற நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

Leave a Comment