காதலில் மனிதருக்கு என்ன கிடைக்கும்..?

ஞானகுரு தரிசனம்

எதற்காக காதல் செய்கிறீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்லும் என்ன தெரியுமா..?  காதல் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் அல்லது அவளுடன்  வாழ்ந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும்’ என்பதுதான். இது எத்தனை பெரிய சுயநலம் என்பதை உணர்வதே இல்லை. அவர்கள் விரும்புபம் நபரும் இதே போன்ற எண்ணத்தில் இருந்தால் அந்தக் காதல் என்னவாகும்?

காதல் என்பது விட்டுக்கொடுத்தல். காதல் என்பது, தான் விரும்புபவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல். காதல் என்பது, தன்னை விட தான் விரும்புபவர் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புதல். இந்த எண்ணத்தில் இருக்கும் இருவர் ஒன்று சேர்வதுதான் காதல். இந்த உண்மை தெரியாமல், தன்னுடைய நலனுக்காக காதல் செய்பவர் அனைவரும் தோற்றுத்தான் போகிறார்கள். தன்னுடைய சந்தோஷத்துக்காக காதல் செய்பவர்கள், தான் விரும்புபவர் சந்தோஷத்துக்காக எதுவும் செய்வதில்லை. இந்த சுயநல முகம் தெரியவரும் நேரத்தில் பெரும்பாலான காதல் முறிந்துபோகிறது. அதனால் சுயநலவாதிகளுக்கு காதல் தோல்வியைத்தான் பரிசாகக் கிடைக்கிறது.

காதல் என்பது விட்டுக் கொடுப்பது, சில நேரங்களில் காதலையும் விட்டுக் கொடுப்பதுதான்.

Leave a Comment