வழக்கறிஞர் நிலா விளக்கம்.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மை என்பது போன்று திருமண வரவேற்பில் த்ரிஷாவுடன் கலந்துகொண்டு விஜய் கெத்து காட்டியிருக்கிறார்.
த்ரிஷாவை தோழி என்று விஜய் சொல்லிக்கொள்ளலாம் என்றாலும் சட்டப்படி இது சரியா என்று விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா.
‘’எந்த ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகலாம். இதை யாரும் குற்றம் சாட்ட முடியாது. அதேநேரம், விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சூழலில் சட்டப்படி இது சரியா என்று பார்க்கலாம்.

வயதுக்கு வந்த எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. எனவே த்ரிஷாவுடன் விஜய் வந்தது சட்டப்படி குற்றம் அல்ல.
ஆனால் விஜய் மீது சங்கீதா புகார் அளித்தால் இது குற்றமாக மாறிவிடும். மனைவி விவாகரத்து கோரியுள்ள சூழலில், கணவன் பொதுவெளியில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது மன ரீதியான சித்திரவதை” (Mental Cruelty) என்ற பிரிவின் கீழ் வரும்.
இதனை ஆதாரமாக வைத்து மனைவி விவாகரத்தையும், அதிகப்படியான ஜீவனாம்சத்தையும் கோர முடியும். மனைவி புகார் அளிக்கும் பட்சத்தில், இது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) ஒரு வலுவான ஆதாரமாக மாறும்.
ஏனென்றால் மனைவியை வேண்டுமென்றே டார்ச்சர் செய்வதற்கு, மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காக வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை பாலியல் வன்முறை என்றே குற்றம் சாட்ட முடியும். இது திட்டமிட்டு நடத்தப்படும் மனநலத் தாக்குதல்.
எனவே சங்கீதா போலீசில் புகார் அளித்தால் விஜய் மீது நடவடிக்கை எடுத்து, சிறைத் தண்டனை பெற்றுத்தர முடியும். அதேபோல், விஜய் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதைக் காட்டி விவாகரத்தும் அதிக ஜீவனாம்சமும் பெற முடியும்.
சட்டப்படி விஜய் செய்தது தவறு என்பதை விட, ஒரு கட்சித் தலைவனாக இருப்பவர் பொதுவாழ்வில் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். கருணாநிதிக்கு மூன்று மனைவிகள், எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள் என்றெல்லாம் சொல்லி இந்த வில்லங்கத்தை மூடி மறைக்கக்கூடாது. அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய சூழல் வேறு.
சட்டம் தண்டிக்கிறதோ இல்லையோ, அறநெறி என்பது ஒரு பொதுவாழ்வில் இருக்கும் நபருக்கு மிக அவசியம். விவாகரத்து நடைமுறையில் இருக்கும்போது இப்படிப் பொதுவெளியில் தோன்றுவது, அவரது ரசிகர்களுக்கு மோசமான முன் உதாரணமாக மாறிவிடும். ஒரு நல்ல ஆணாகவும், ஒரு நல்ல தலைவனாகவும் விஜய்.
மனைவியை, சட்டத்தை மதிக்காத ஒருவர் எப்படி மக்களை மதிப்பார்..?
