தூக்கமின்மை, இதயத்துடிப்பு அதிகரிப்பு, படபடப்புக்கு சுவாசப் பயிற்சி விரைந்து தீர்வு தருகிறது. அதாவது 4 விநாடி மூச்சை உள்ளிழுத்தல், 7 விநாடி மூச்சை நிறுத்தி வைத்தல், 8 விநாடி வெளியேற்றல் என்ற நடைமுறையை ஐந்து முறை மேற்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- தினமும் 20 நிமிடம் நடப்பதன் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு, ஸ்ட்ரெஸ் போன்ற பல்வேறு பிரச்னைகள் சிறப்பாக கட்டுப்படுத்தப்படுவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நடக்க மறக்காதீங்க.
- இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பதன் காரணமாக மெலடோனின் சுரப்பு குறைந்து இன்சுலின் சுரப்பு சிக்கலாவதால் நீரிழிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது. தூக்கத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருந்து விடுதலை வேண்டும்.
- தேவைக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் காரணமாக உடலில் சோடியம் குறையலாம். அதோடு மயக்கம், தலைவலி ஏற்படவும் காரணமாகலாம். எனவே, தாகம் ஏற்படும் நேரத்தில் தேவையான அளவு குடிப்பது போதும்.
- காலை நேரத்தில் அதாவது 6.30 – 8.30 மணிக்குள் சுமார் 15 நிமிடம் வெயிலில் நிற்பதும், நடப்பதும் வைட்டமின் டி தருகிறது. அதோடு மனச்சோர்வு, தூக்கக் கோளாறு, ஹார்மோன் பற்றாக்குறையையும் சீராக்குகிறது. கை, காலில் நேரடியாக வெயில் படுவது அதிக நன்மை தரும்.
