வெயிட் கூடுதா…? இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க

மெடிக்கல் மிரக்கிள்

சத்தான உணவு, போதிய உடற்பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் பருமன் எனப்படும் கூடுதல் எடையைக் குறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. உடலில் வெயிட் கூடுவதற்கு முக்கியமான காரணம் உறக்கமின்மை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வுகளின் படி, போதிய அளவு தூக்கம் இல்லையென்றால், அவரது உடல் சத்தான உணவையும் கொழுப்பாக மாற்றத் தொடங்கிவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதிக வெயிட் போட்டிருப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

குறைவாகத் தூங்குவதன் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு, கலோரிக்கள் எரிக்கப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன. எனவே, உணவு, பயிற்சியுடன் உறக்கத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைத்துவிடலாம்.

Leave a Comment