மெடிக்கல் மிரக்கிள்
குட்டியூண்டு ரீல்ஸ் வீடியோக்கள் இன்று பெரும்பாலான மனிதர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த குறுகிய கால வீடியோக்களை அதிக அளவு பார்க்கும் தன்மையினால், பொழுதுபோக்கு மூளையின் அமைப்பும் மாறுகிறது என நரம்பியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, குட்டி வீடியோக்கள் மூளையின் கவனிக்கும் திறனை வெகுவாகப் பாதிக்கிறது. இதன் மூலம் எந்த ஒன்றின் மீதும் நீண்ட நேரம் ஆர்வம் செலுத்த முடியாத தன்மை உருவாகிவிடும் என்கிறார்கள்.
வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற தூண்டுதல் மூளையின் ப்ரீஃப்ரண்டல் கார்டெக்ஸ்’ (Prefrontal Cortex) பகுதியில் ஏற்படுவதால், அதிக நேரம் படிப்பது அல்லது ஒரு வேலையை நீண்ட நேரம் செய்வது போன்ற செயல்கள் எரிச்சலூட்டுகிறது.
எனவே, ரீல்ஸ் பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிப்பதும், சினிமா, டாக்குமெண்டரி போன்ற நீண்ட வீடியோக்கள் பார்ப்பதும் மூளையின் தன்மையை மீட்டெடுக்கும் என்கிறார்கள். எல்லாமே விரைந்து நடக்கவேண்டும் என்ற எண்ணமே ஏமாற்றத்தைக் கொடுத்துவிடும், ஜாக்கிரதை.
