பால் டப்பாவின் சினிமா கவிதை
மலர் ஒன்று பறந்து செல்கிறதே…. அட அது பட்டாம்பூச்சி என்பது அட்டகாசக் குட்டிக் கவிதை. இதுபோன்று வார்த்தை விளையாட்டுகளே கவிதை/
அந்த வகையில் இன்னொரு கவிதை கீழே இருக்கிறது.
உனை
உன் பிள்ளைகளோடு
பார்க்காமல் இருந்திருந்தால்
நானும்
நம்பியிருக்க மாட்டேன்.
மயிலிறகு
குட்டி போடுமென்று.
- பித்தன்
இன்று பாடல் எழுதுவதற்கு திறமை இருந்தால் யாரும் காத்திருக்கத் தேவையில்லை, தங்கள் எழுத்தை சோஷியல் மீடியாவில் போட்டால் போதும். அதில் வித்தியாசம், தனித்தன்மை இருந்தால் நிச்சயம் பாப்புலராகிவிடும்.
அந்த வகையில் பால் டப்பா டியூட் படத்தில் எழுதிய பாடல் ரொம்பவே வித்தியாசமானது. இரண்டு வரி மட்டும் பார்க்கலாம்.
ஆண் : ஓர் அலை அவள்; கலை அவள்; அழகிய நிலவவள் நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவள் சரி அவள்; தவறவள்; சிரிக்கிற சிரிப்புக்கு அவள்தான் காரணமா?
பெண் : என் மூச்சவன்; பேச்சவன்; பேர் சொல்லும் அழகவன் எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவன். யார் அவன் யார் அவன்; ஊர் சொல்லும் ஸ்டார் அவன் அவன்தான் என்னவனா?
கலக்குறாங்கப்பா…
