வழக்கறிஞர் நிலா ஆலோசனை
பில்டர்களை நம்பி வீட்டுமனை வாங்கமுடியுமா, இரண்டு ஆண்டுகளுக்குள் வீடு கட்டிக் கொடுத்துவிடுவதாகச் சொல்வதை நம்ப முடியுமா என்றெல்லாம் சந்தேகம் வருகிறதா…?
கவலையேபட வேண்டாம். ரியல் எஸ்டேட் ரெகுலேசன் அண்ட் டெவலப்மெண்ட் எனப்படும் ரேரா அங்கீகாரம் பெற்ற பிராஜெக்ட் வாங்குங்கள். ரேரா அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

கட்டுமானத் திட்டம் சட்டப்படி பாதுகாப்பானது, நம்பிக்கைக்குரியது என்பதற்கான ஒரு சான்று. எனவே நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது அபார்ட்மெண்ட் வாங்கும்போது, அது ரேரா அங்கீகரிப்பு பெற்றதா இல்லையா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
ரேரா அங்கீகாரம் பெறும் கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான விவரங்களை வழங்க வேண்டும். கட்டுவதற்கு முன்பு நில அளவு, கட்டுமான காலம், அனுமதிகள், கட்டட வரைபடம், முதலீட்டு விவரங்கள் போன்றவை கிடைக்கும்.
ஒரு வேளை திட்டம் முடிவது தாமதமாகும் பட்சத்தில் பில்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உறுதியளித்த வகையில் கட்டுமானம் இல்லை என்றால் ரேராவில் புகார் செய்ய முடியும். எனவே, நீங்கள் வாங்கும் அடுக்குமாடி வீடு புராஜெக்ட் சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
எந்த ஒரு வீட்டுமனையும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வகையில் வந்து சேர்வது உறுதியில்லை. அதேநேரம், ரேரா அங்கீகாரம் இருக்கும்பட்சத்தில் நிம்மதியாக இருக்க முடியும்.
கட்டுமான நிறுவனத்திற்கு ரேரா அங்கீகாரம் இருக்கிறதா என்பதை அவர்களுடைய விளம்பரங்களில் தெரிந்துகொள்ள முடியும். இனிமேல், வாங்கிவிடுவோம், அப்ளை செய்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம்.
நிம்மதியாக வாழ்வதற்கே வீடு வாங்குகிறோம், அதில் நிம்மதியைத் தொலைத்துவிட வேண்டாம்.
