ஜலதோஷத்துக்கு டாக்டர் எதுக்கு..?

வீட்டு மருத்துவம்

நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை ஜலதோஷம் பிடிப்பது எல்லா மனிதருக்கும் சகஜமாக நடக்கும் ஒன்றுதான். ஒருவருக்கு வரும் ஜலதோஷம் காரணமாக வீட்டில் மற்றவர்களுக்குத் தொற்றுவதும் இயல்பான ஒன்றுதான்.

ஒரு வாரம் முறை 10 நாட்கள் வரை மட்டுமே இருக்கக்கூடிய இந்த ஜலதோஷத்துக்காக மருத்துவரைப் பார்ப்பதாலும் மருந்து வாங்கி சாப்பிடுவதால், இதனால் வரும் அவஸ்தையை மட்டுமே குறைக்க முடியும். இதற்குப் பதிலாக இயற்கை பொருட்கள் மூலம் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.  

சமையலறைப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் மூலம் வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். ஆனால், உடனடி மேஜிக் நடக்காது என்பதால் நாலைந்து நாட்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

மருந்து, மாத்திரை, டானிக் இல்லாமல் ஜலதோஷத்துக்கான வீட்டு மருத்துவத்தைப் பார்க்கலாம்.

  • பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்
  • கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.
  • கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்
  • ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்
  • ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்
  • வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்           

இதுபோன்ற வீட்டு மருத்துவம் காரணமாக சளி அவஸ்தையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்காது என்றாலும், உடலுக்குத் தெம்பும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே, முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Comment