புரட்சித்தலைவர் பாணியில் சொந்தச் செலவு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 460

புரட்சித்தலைவர் முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் தன்னுடைய சொந்த கார், சொந்த வீடு போன்றவைகளையே பயன்படுத்தினார். அதே பாணியில் அவரது தொண்டர் மேயர் சைதை துரைசாமியும் ஐந்து ஆண்டு காலமும் மாநகராட்சியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை.

மேயர் பதவி என்பது சேவை செய்வதற்கு உதவும் ஒரு கருவி என்பதில் சைதை துரைசாமி மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். அதனால்தான், சைதை துரைசாமி மேயராக இருந்த காலத்தில் மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட செலவு வைக்கவே இல்லை.

 மாநகராட்சி வாகனங்கள், பணியாளர்கள், தொலைபேசி, கைபேசி, பத்திரிகைகள் போன்ற  எந்த  சலுகைகளையும் சைதை துரைசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதுமட்டுமின்றி  அலுவல் நிமித்தமாக, அரசு அனுமதியுடன்  மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணங்களின் விமானப் பயணக் கட்டணம்  போன்ற  அனைத்து செலவுகளையும் சைதை துரைசாமியே  ஏற்றுக் கொண்டார்.

மேயராக பொறுப்புக்கு வந்ததில் இருந்து சைதை துரைசாமி, அவரது சொந்த வாகனத்தை மட்டுமே பயன்படுத்தினார். சொந்த வாகனத்திற்கு சொந்த செலவில் எரிபொருள் நிரப்பி 3,57,000 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பயணம் செய்திருக்கிறார்.

சைதை துரைசாமி தன்னுடைய சொந்தப் பணத்தில்தான் மேயர் பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திய பெருமை திமுக நடத்திவரும் முரசொலி நாளேட்டுக்குத்தான் சேரும். ஆம், சைதை துரைசாமி மீது குற்றம் சாட்டுவதாக பொய் சொல்லி மாட்டிக்கொண்டார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment