என்ன செய்தார் சைதை துரைசாமி – 459
புரட்சித்தலைவர் தொட்டது எல்லாமே துலங்கும் என்பார்கள். அதுபோன்று மேயர் சைதை துரைசாமி கொண்டுவரும் மாற்றங்கள் எல்லாமே புதுமையாக இருப்பது மட்டுமின்றி மாபெரும் வெற்றியும் பெறும்.
மேயராக இருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தரும் கோரிக்கை மனுக்களையும், புகார் மனுக்களையும் பரிசீலித்து தீர்வு காண்பதிலும் ஐந்து ஆண்டுகளில் சைதை துரைசாமி பெரிய சாதனையே படைத்திருக்கிறார்.
சைதை துரைசாமிக்கு கைப்பேசி மூலம் வந்த கோரிக்கைகள் = 1,16.009
நேரில் மற்றும் தபால் மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் = 70,417
1913 புகார் பிரிவு மூலம் கிடைக்கப்பட்ட புகார்கள் = 3,34,905
பத்திரிகை, மீடியா மூலம் பெறப்பட்டவை = 15,610
ஆக மொத்தம் 5,69,629 புகார் மற்றும் கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
செய்தித்தாள்களில் அன்றாடம் வெளிவரும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னைக் குடிநீர் வாரியம், வருவாய்த்துறை, குடிசைமாற்று வாரியம், பொதுப் பணித்துறை, மின்சார வாரியம், சமூகநலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை முதலான சேவைத் துறை மற்றும் பிற துறைகள் சார்ந்த மனுக்கள் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் 4239 கடிதங்கள் மேயர் அவர்களால் அனுப்பப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன..
இங்கு இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் 5 ஆண்டு காலத்தில் பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 5,665 மட்டும்தான். அவர் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமே பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவருக்கு முன்பு மேயராக இருந்தவர்கள் மனு வாங்கியது குறித்து மாநகராட்சியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் விசித்திரம்.
- நாளை பார்க்கலாம்.
