காதலிப்பதற்குத் தகுதி வேண்டும் ஆண்களே…

காதலர் தின ஸ்பெஷல்

காதல் மகிழ்ச்சி தரக்கூடியது. காதல் நம்பிக்கை தரக்கூடியது. அதனாலே, ஆண்கள்  காதல் செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை லவ் பண்ணுவதற்கும், அந்த லவ் நிலைத்து நிற்பதற்கும், அந்த லவ் திருமணத்தில் முடிவதற்கும், திருமணத்திற்குப் பிறகும் லவ் வாழ்க்கையில் இருப்பதற்கும் ஆணுக்கு 7 தகுதிகள் இருக்க வேண்டும்.

  1. காதலிப்பதற்கு ஸ்டார், வானவில் என்று கவித்துவமாகப் பேசத் தெரிவது முக்கியமல்ல… உடலும், மனதும் ஆரோக்கியமாக இருப்பதே முதல் தகுதி.
  2. குடும்பத்துக்குத் தேவையான பணம் சம்பாதிப்பதும் நிலையான பொருளாதாரமும் இரண்டாவது தகுதி.
  3. பெண்ணிடம் நகை, பணம் எதிர்பார்க்காத சமத்துவம் மூன்றாவது தகுதி.
  4. காதலுக்காக குடும்பத்தை  தியாகம் செய்வது மற்றும் எதிர்த்து நிற்கும் வலிமையுடன் இருப்பது நான்காவது தகுதி.
  5. பெண்ணின் கோபம், சுயநலம் போன்ற பலவீனங்களுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஐந்தாவது தகுதி.
  6. பெண்ணுடன் கலந்துபேசி முடிவு எடுக்கும் இயல்பு ஆறாவது தகுதி.
  7.  எதிர்காலத்தில் அவர்  பிரிய விரும்பினால், அதற்கும் மனப்பூர்வமாக சம்மதிக்கும் பெருந்தன்மை கடைசி தகுதி.  

காதலை பெண்ணிடம் சொல்வதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு சரியான விடை இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள். தகுதி இருப்பதாக நினைத்தால் மட்டும், விரும்பும் பெண்ணிடம்  காதலைச் சொல்லுங்கள்.  அவர் ஏற்றுக்கொண்டால் மனைவியாவார். ஏற்கவில்லை என்றால் என்றென்றும் மனதில் காதலியாக இருப்பார். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment