மனம் வலிமைக்கு என்ன வேண்டும்?

ஞானகுரு பார்வை

கேள்வி : உடல் சக்தி பெற ஆகாரம் தேவைப்படுவது போன்று மனம் சக்தி பெற என்ன தேவை..?

  • ஏ.மாலினி தேவி, சசிநகர்.

ஞானகுரு :

சிந்தனைகளே மனம். அந்த மனம் சக்தி பெற வேண்டும் என்றால் நல்ல சிந்தனைகளை மனதில் விதைக்க வேண்டும். நல்ல சிந்தனை வேண்டும் என்றால் ஆசையைத் துறக்க வேண்டும். அவ்வளவு தான்.

கேள்வி : இந்த உலகில் பந்தயக் குதிரையாக இருந்தால் தானே வெற்றி பெற முடியும்..?

  • சி.கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை.

ஞானகுரு :

வெற்றி பெற்ற குதிரைக்கும் தோற்றுப்போன குதிரைக்கும் ஒரே அளவு தீவனமே கொடுக்கப்படுகிறது. எனவே, ஓடிக்கொண்டே இருப்பது மட்டும் அல்ல, ஓய்வு எடுப்பதும் வெற்றியே.

Leave a Comment